/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தில் முறைகேடு:ஊழியர்கள் "திடுக்'புகார்108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தில் முறைகேடு:ஊழியர்கள் "திடுக்'புகார்
108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தில் முறைகேடு:ஊழியர்கள் "திடுக்'புகார்
108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தில் முறைகேடு:ஊழியர்கள் "திடுக்'புகார்
108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தில் முறைகேடு:ஊழியர்கள் "திடுக்'புகார்
ADDED : ஜூலை 25, 2011 09:23 PM
திருப்பூர் : 'திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன,' என அதன் ஊழியர்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். உதவி கலெக்டர் சரஸ்வதி, துணை கலெக்டர் செல்வராஜ், நேர்முக உதவியாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர்.திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் 108 ஆம்புலன்ஸ் களில் பணியாற்றும் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அளித்த மனு விவரம்: எங்களுக்கு 12 மணி நேரம் வேலை; சில சமயங்களில் கூடுதலாகவும் பணியாற்றுகிறோம். எங்கள் குறைகள் குறித்து கோரிக்கை விடுத்தால், மாவட்ட அளவில் இடமாற்றம் செய்யப்படுகிறோம். நோயாளிகளுடன் பணியாற்றும் எங்களுக்கு நோய்த் தடுப்பு வசதியில்லை. ஓய்வு எடுக்க எந்த வசதியும் இல்லை. இச்சேவைக்கு அரசு பல கோடிகள் செலவிடுகிறது. அதிக நோயாளிகள் ஏற்றிச் சென்றால் வாகனத்தில் மைலேஜ் கிடைக்காது. இதுவரை 158 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சேவைக்கு பல நிறுவனங்கள் மருந்து பொருட்களை இலவசமாக வழங்குகின்றன. ஆனால், அவற்றை விலை கொடுத்து வாங்கியதுபோல் கணக்கு எழுதி மோசடி செய்யப்படுகிறது. இ.எஸ்.ஐ., - பி.எப்., போன்றவற்றில் ஊழியர்களின் பங்கு குறித்து எந்த கணக்கும் முறையாக இல்லை. அரசையும், ஊழியர்களையும் ஏமாற்றுகின்றனர்.இச்சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும். வேலையை எட்டு மணி நேரமாக்க வேண்டும். கூடுதல் பணி நேரத்துக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். சம்பள உயர்வு அளிக்க வேண்டும்; நோய்த்தடுப்பு வசதி வேண்டும். வாகனம் நிறுத்த இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பணியை விரைவுபடுத்த கோரிக்கை: வேலம்பாளையம் நகராட்சி துணை தலைவர் சரோஜா மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், 'பெரியார் காலனி முதல் கணேஷ் தியேட்டர் வரை தார் ரோடாக மாற்றும் பணியும், செட்டிபாளையம் ஊராட்சியை இணைக்கும் ரோடும், பெரியார் காலனியில் பார்க் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது; இப்பணி இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. பணியை விரைவுபடுத்த வேண்டும்,' என்று கூறியுள்ளார்.தொட்டிபாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், 'ஆற்றோரம் உள்ள புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு வசித்தோம். கொசுத்தொல்லையால், கங்கா நகர், ஆவரங்காடு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் 40 குடும்பங்கள் கடந்த நான்கு மாதங்களாக வசிக்கிறோம். அந்த இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.அதன்பின், நலிந்தோர் நலத்திட்டத்தில் நான்கு பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டது. கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொது தேர்வில் அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்பட்ட வகுப்பை சேர்ந்த மூன்று மாணவர்கள், மூன்று மாணவியருக்கு தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க நிதி உதவி அளிக்கப்பட்டது.பாட்டியால் பரபரப்பு: பல்லடம், கோடங்கிபாளை
யத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்ற மூதாட்டி, தனது நிலம் மற்றும் வீடு உறவினர்களால் அபகரிக்கப்பட்டது குறித்து ஒரு மாதத்துக்கு முன் கலெக்டரிடம் புகார் செய்தார். அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூச்சலிட்ட படி, அங்கும் இங்குமாக அலைந்தார். அங்கிருந்த பெண் போலீசார், அவரை கட்டுப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை. கலெக்டரின் கார் முன் அமர்ந்து, அதிகாரிகளை வசைபாடினார். அவரை நீண்ட நேரம் போராடி போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.