/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மும்பை குண்டு வெடிப்பு கோவையில் பலத்த பாதுகாப்புமும்பை குண்டு வெடிப்பு கோவையில் பலத்த பாதுகாப்பு
மும்பை குண்டு வெடிப்பு கோவையில் பலத்த பாதுகாப்பு
மும்பை குண்டு வெடிப்பு கோவையில் பலத்த பாதுகாப்பு
மும்பை குண்டு வெடிப்பு கோவையில் பலத்த பாதுகாப்பு
ADDED : ஜூலை 14, 2011 02:04 AM
கோவை : மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு கோவையில் நேற்று இரவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
நேற்று இரவு கோவையிலிருந்து சென்ற அனைத்து ரயில்களையும் மோப்ப நாய்கள் மூலமும், 'மெட்டல் டிடெக்டர்' கருவி மூலமும் நிபுணர்கள் சோதனை செய்தனர். பயணிகள் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன. போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி உத்தரவின் பேரில், அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டன. பீளமேடு விமானநிலையம், அனைத்து பஸ் ஸ்டாண்டுகள், கோவில், மசூதிகள், சர்ச்சுகள் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இரவு முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்தது.


