/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியாறு அணை நீரில் மண்படிவங்கள் மத்திய நீர்மின் ஆராய்ச்சி குழு ஆய்வுபெரியாறு அணை நீரில் மண்படிவங்கள் மத்திய நீர்மின் ஆராய்ச்சி குழு ஆய்வு
பெரியாறு அணை நீரில் மண்படிவங்கள் மத்திய நீர்மின் ஆராய்ச்சி குழு ஆய்வு
பெரியாறு அணை நீரில் மண்படிவங்கள் மத்திய நீர்மின் ஆராய்ச்சி குழு ஆய்வு
பெரியாறு அணை நீரில் மண்படிவங்கள் மத்திய நீர்மின் ஆராய்ச்சி குழு ஆய்வு
ADDED : அக் 03, 2011 10:56 PM
கூடலூர் : பெரியாறு அணையில் தேங்கியிருக்கும் நீரில் மண் படிவங்கள் குறித்து மத்திய நீர்மின் ஆராய்ச்சி நிலைய பொறியாளர் குழு ஆய்வுப்பணியை நேற்று துவக்கியது.
பெரியாறு அணை பலம் குறித்து, ஐவர் குழுவின் பரிந்துரையின் பேரில் பல்வேறு கட்டங்களாக ஆய்வுப்பணி நடக்கிறது. அணையில் தேங்கியிருக்கும் நீரில் உள்ள மண் படிவங்கள் குறித்து, மத்திய நீர்மின் ஆராயச்சி நிலைய முதன்மை ஆராய்ச்சி அலுவலர் செல்வபாலன் தலைமையிலான குழு ஆய்வுப்பணியை துவக்கியது. ஆய்வு: தேக்கடி ஏரியில் மண் படிவங்கள் எவ்வளவு ஆழத்தில் அமைந்துள்ளது, அங்குள்ள சகதியின் தன்மை ஆகியவை குறித்து கதிர்வீச்சு மூலம் அறிய உள்ளனர். மண்படிவங்களின் நிலை குறித்து உடனடியாக படகில் பொருத்தப்பட்ட மடி கணினியில் பதியப்படுகிறது. நேற்று பகல் 11 மணிக்கு தேக்கடி படகு நிறுத்தப்பகுதியில் இருந்து துவங்கிய இந்த ஆய்வு மனக்கவலை என்ற இடத்தில் பகல் ஒரு மணிக்கு பேட்டரி குறைவால் தடைபட்டது. மீண்டும் இந்த ஆய்வு இன்று துவங்கும். தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வின் அறிக்கையை, இக்குழு சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவிடம் சமர்ப்பிக்கும்.


