Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மீன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்: ஏர்வாடியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

மீன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்: ஏர்வாடியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

மீன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்: ஏர்வாடியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

மீன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்: ஏர்வாடியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

ADDED : ஆக 11, 2011 01:01 AM


Google News

கீழக்கரை : ஏர்வாடி பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டப்பட்ட மீன் மார்க்கெட் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மீன், இறைச்சி வியாபாரிகள் தர்கா அருகே மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து பாதித்து மக்கள் சிரமப்படுகின்றனர். ஏர்வாடி தர்கா பகுதியில் ஆக்கிரமிப்பால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். கடந்த மாதம் கடலாடி தாசில்தார் சேகர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சில தினங்கள் காணாமல் போன மீன் கடைகள் மீண்டும் ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளியில் ஆடுகளை அறுத்து வியாபாரம் செய்து வருகின்றனர். நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சுகாதார துறையினர் உறக்கத்தில் உள்ளனர். ஏர்வாடி முகம்மது கூறியதாவது: மக்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தும் வகையில் பஸ் ஸ்டாண்ட் அருகே 10 லட்ச ரூபாயில் மீன் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. வியாபாரிகள் மாற்று இடத்திற்கு செல்ல தயங்குவதால் ஊராட்சி தலைவரின் மறைமுக ஆதரவுடன் மீன், இறைச்சி வியாபாரம் தொடர்ந்து ரோட்டோரத்தில் நடந்து வருகிறது. ஊராட்சிக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகளை அகற்றி புதிய கட்டடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி தலைவர் குணசேகரன் கூறியதாவது: மீன் மார்க்கெட் கட்டடம் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. தர்கா அருகே ரோட்டோரத்தில் திறந்த வெளியில் வியாபாரம் செய்யும் மீன், இறைச்சி, காய்கறி கடைகளையும் புதிய கட்டடத்திற்கு கொண்டு செல்ல விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us