/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சாத்தை., யூனியன் கவுன்சில் பதவிக்கு பல முனைப் போட்டிசாத்தை., யூனியன் கவுன்சில் பதவிக்கு பல முனைப் போட்டி
சாத்தை., யூனியன் கவுன்சில் பதவிக்கு பல முனைப் போட்டி
சாத்தை., யூனியன் கவுன்சில் பதவிக்கு பல முனைப் போட்டி
சாத்தை., யூனியன் கவுன்சில் பதவிக்கு பல முனைப் போட்டி
சாத்தான்குளம் : சாத்தான்குளம் யூனியனில் கவுன்சிலர் பதவிக்கு பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் யூனியன் 13 வது வார்டுக்கு அதிமுக., சார்பில் அமுதுண்ணாகுடி பஞ்., செயலாளர் சுரேஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக., ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன், அமுதுண்ணாகுடி பஞ்., தலைவர் சாமுவேல், ராஜரீகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 8வது வார்டில் திமுக., சார்பில் காசியானந்தம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 5வது வார்டில் அந்தோணி ஜெயசீலன், 6வது வார்டில் கணபதி, 14வது வார்டில் ஆசைத்தம்பி, 13வது வார்டில் சின்னத்துரை, 7வது வார்டில் சோமசுந்தரி, 4வது வார்டில் விக்டோரியா, 3 வது வார்டில் லிங்கத்துரை, 2வது வார்டில் ஜாக்குலின் நெல்சன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நிகழ்ச்சியில் திமுக., மாவட்ட பிரதிநிதி ஜோசப் மெஸ்மின், கெங்கை ஆதித்தன், நகர செயலாளர் ஜோசப், பன்னம்பாறை நயினார், போலையர்புரம் டேவிட், முன்னாள் அவைத்தலைவர் சௌந்தரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.