/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் சார்பில் சமூக அறிவியல், ஒருமைப்பாடு கண்காட்சிகேந்திரிய வித்யாலயா பள்ளிகள் சார்பில் சமூக அறிவியல், ஒருமைப்பாடு கண்காட்சி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் சார்பில் சமூக அறிவியல், ஒருமைப்பாடு கண்காட்சி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் சார்பில் சமூக அறிவியல், ஒருமைப்பாடு கண்காட்சி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் சார்பில் சமூக அறிவியல், ஒருமைப்பாடு கண்காட்சி
ADDED : செப் 30, 2011 01:56 AM
புதுச்சேரி : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சமூக அறிவியல் மற்றும் தேசிய
ஒருமைப்பாடு கண்காட்சி ஜிப்மர் வளாகத்தில்நடந்தது.
ஜிப்மர் வளாகத்தில்
கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் உள்ள
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் சார்பில் சமூக அறிவியல் மற்றும் தேசிய
ஒருமைப்பாடு குறித்த கண்காட்சி ஜிப்மர் அரங்கில் நேற்றுமுன்தினம்
துவங்கியது. கனடா நாட்டின் கலாசாரத்தை வலியுறுத்தும் விதமாக 11 கேந்திர
வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகளின் குழு நடனம் மற்றும் திரிபுரா மாநில
கலாசாரத்தை வலியுறுத்தும் குழு பாட்டு மற்றும் ஓரங்க நாடகங்களும் நடந்தன.
விழாவில் கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
ஜிப்மர் இயக்குனர் டாக்டர் சுப்பாராவ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளி துணை முதல்வர் கல்யாணி நன்றி கூறினார். விழா
ஏற்பாடுகளை முதுநிலை ஆசிரியர் லோகநாதன், ஆசிரியர்கள் பத்மா, ஏசுதாஸ்,
சரவணன், இந்திரா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.