/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பிரச்னை ஏற்பட்டு கடந்த கால தேர்தலில் இல்லாத வாக்குச்சாவடியில் தற்போது வாக்குச்சாவடிபிரச்னை ஏற்பட்டு கடந்த கால தேர்தலில் இல்லாத வாக்குச்சாவடியில் தற்போது வாக்குச்சாவடி
பிரச்னை ஏற்பட்டு கடந்த கால தேர்தலில் இல்லாத வாக்குச்சாவடியில் தற்போது வாக்குச்சாவடி
பிரச்னை ஏற்பட்டு கடந்த கால தேர்தலில் இல்லாத வாக்குச்சாவடியில் தற்போது வாக்குச்சாவடி
பிரச்னை ஏற்பட்டு கடந்த கால தேர்தலில் இல்லாத வாக்குச்சாவடியில் தற்போது வாக்குச்சாவடி
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே ஏற்கனவே இரண்டு கிராம மக்கள் மோதிய இடத்தில் தற்போது வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் புதிய பிரச்னை எழுந்துள்ளது.
இந்த ஊர் மக்களின் ஓட்டுகளை அந்த ஊர் மக்கள் போட்டுவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுடனர். இதனால் இரு கிராமத்தினருக்கும் இடையே அப்போது கடும் பிரச்னை உருவானதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தூத்துக்குடி பாளை ரோட்டில் பஸ் மறியல் நடந்தது. பின்னர் பேச்சுவார்த்தை நடந்தது. கலெக்டர் அடுத்த தேர்தலில் சூசைபாண்டியபுரம் பள்ளியில் வாக்குச்சாவடி அமைப்பதாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து 2006 உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதன் பிறகு நடந்த எம்.பி, எம்.எல்.ஏ தேர்தலிலும் சூசைபாண்டியாபுரம் மக்கள் அவர்கள் ஊரில் உள்ள ஆர்.சிபள்ளியில் வைத்து வாக்களித்தனர்.
இம் மாதம் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் சூசைபாண்டியாபுரம் மக்கள் ராமச்சந்திரபுரத்திற்கு சென்று அங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளனர். சிலரது தூண்டுதலின் பேரில் இவை நடந்திருப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். சூசைபாண்டியாபுரத்திற்கும், ராமச்சந்திரபுரத்திற்கும் இடையே இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ஏற்கனவே இரண்டு ஊர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதால் மீண்டும் அதே ஊருக்கு சென்று வாக்களிக்க மக்கள் சங்கடப்படுகின்றனர். இதனால் எங்கள் ஊரில் செயல்பட்ட வாக்குச்சாவடியை உள்ளாட்சி தேர்தலிலும் செயல்பட அனுமதிக்க வேண்டும். உடனடியாக மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை செய்யாவிட்டால் சூசைபாண்டியாபுரம் மக்கள் ஒட்டு மொத்தமாக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பு செய்துவிடுவோம் என்று கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இது சம்பந்தமாக புகார் மனுவை கலெக்டர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பிரச்னை ஏற்பட்ட வாக்குச்சாவடிக்கு மீண்டும் சென்று வாக்களிக்க சென்றால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பாக முடியும் என்பதை கூட சிந்திக்காமல் செயல்பட்டிருப்பது அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக சூசைபாண்டியாபுரம் மக்கள் தெரிவித்தனர்.


