/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நூலகத் தகவல் உதவியாளர்களுக்கு சம்பள முரண்பாட்டைக் களையகோரிக்கைநூலகத் தகவல் உதவியாளர்களுக்கு சம்பள முரண்பாட்டைக் களையகோரிக்கை
நூலகத் தகவல் உதவியாளர்களுக்கு சம்பள முரண்பாட்டைக் களையகோரிக்கை
நூலகத் தகவல் உதவியாளர்களுக்கு சம்பள முரண்பாட்டைக் களையகோரிக்கை
நூலகத் தகவல் உதவியாளர்களுக்கு சம்பள முரண்பாட்டைக் களையகோரிக்கை
ADDED : அக் 05, 2011 01:21 AM
புதுச்சேரி : கலை பண்பாட்டு துறையில் பணிபுரியும் நூலகத் தகவல் உதவியாளர்களுக்கு சம்பள முரண்பாட்டைக் களைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கலை பண்பாட்டுத் துறை தொழில்நுட்ப ஊழியர் சங்கத் தலைவர் விஜயகுமார், செயலாளர் பூமிநாதன், பொருளாளர் விஜயகுமார் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
கலை பண்பாட்டுத் துறையின் 73 நூலக தகவல் உதவியாளர்களில் 37 பேருக்கு 1.1.96 முதலும், 19 பேருக்கு பி.எல்.ஐ.எஸ்., படிப்பு முடித்த நாளிலிருந்து 5வது ஊதியக் குழுவின் திருத்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், 30 ஆண்டுகள் பணி முடித்த சீனியரான நூலகத் தகவல் உதவியாளர்களுக்கு, 5000 8000 அடிப்படை ஊதிய விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரே துறையில் ஒரே பதவி, ஒரே பணி செய்து வரும் நூலக தகவல் உதவியாளர்களுக்கு இருவேறு சம்பள விகிதம் வழங்கப்படுவதால், ஜூனியர்கள் அதிக சம்பளம் பெறும் நிலை உள்ளது. 1990க்குப் பிறகு காலியான பதவிகளை நிரப்பாததால், ஒரு நூலகர் இரு கிளை நூலகங்களைக் கூடுதலாக கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால், ஒரே பணி நியமன விதியின் கீழ் சேர்ந்த கல்வித்துறை நூலகர்களுக்கு மட்டும் ஐந்தாவது ஊதியக்குழுவின் திருத்தப்பட்ட ஊதியம் , கல்வித் தகுதியை தளர்த்தி அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சீனியர் ஊதிய விகிதம் வழங்கி, தற்போது 6வது ஊதியக்குழு பரிந்துரை சம்பளமும் வழங்கபடுகிறது.கலை பண்பாட்டுத் துறையின் நூலகத் தகவல் உதவியாளர்களுக்கு, அரசு துரோகம் செய்து வருகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை. நூலகத் தகவல் உதவியாளர்களுக்கு, 5வது ஊதியக் குழுவின் திருத்தப்பட்ட சம்பள விகிதம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


