/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை சங்கீத சபா இசை நிகழ்ச்சி பூர்ணிமா கிருஷ்ணன் வாய்ப்பாட்டுநெல்லை சங்கீத சபா இசை நிகழ்ச்சி பூர்ணிமா கிருஷ்ணன் வாய்ப்பாட்டு
நெல்லை சங்கீத சபா இசை நிகழ்ச்சி பூர்ணிமா கிருஷ்ணன் வாய்ப்பாட்டு
நெல்லை சங்கீத சபா இசை நிகழ்ச்சி பூர்ணிமா கிருஷ்ணன் வாய்ப்பாட்டு
நெல்லை சங்கீத சபா இசை நிகழ்ச்சி பூர்ணிமா கிருஷ்ணன் வாய்ப்பாட்டு
ADDED : ஆக 30, 2011 12:07 AM
திருநெல்வேலி : நெல்லை சங்கீத சபாவில் பூர்ணிமா கிருஷ்ணன் கர்நாடக இன்னிசை கச்சேரி நடந்தது.
சென்னையை சேர்ந்தவர் பூர்ணிமா கிருஷ்ணன். இவர் இசை மற்றும் நாட்டிய பரம்பரையில் மூன்றாவது தலைமுறையை சேர்ந்தவர். தனது தாயாரும், சோலைக் கண்ணன் பிரதர்ஸ் சிஷ்யையுமான மீனா கிருஷ்ணனிடம் கர்நாடக இசை பயின்றார். சென்னை பல்கலைக் கழகத்தில் ஏம்.ஏ.மியூசிக் பட்டம் பெற்றவர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சபாக்களில் பாடியுள்ளார். பரதநாட்டியத்திலும், மிருதங்கம் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். பூர்ணிமா கிருஷ்ணனின் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி நெல்லை சங்கீத சபாவில் நேற்று நடந்தது. திருவனந்தபுரம் சம்பத் வயலின், இலஞ்சி மேல் சுசில்குமார் வயலின், நெய்யாற்றின்கரா கிருஷ்ணன் முகர்சிங் பக்கவாத்திய இசை நடந்தது. சண்முகப்பிரியா ராகத்தில் பாடல்களை பாடியதை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். பூர்ணிமா கிருஷ்ணன் பாடல்களை பாராட்டி சங்கீத சபா செயலாளர் நடேசன், இந்திரா கிருஷ்ணமூர்த்தி பேசினர்.


