மதுரை கலெக்டருக்கு போலீஸ் பாதுகாப்பு
மதுரை கலெக்டருக்கு போலீஸ் பாதுகாப்பு
மதுரை கலெக்டருக்கு போலீஸ் பாதுகாப்பு
ADDED : செப் 13, 2011 12:34 AM
மதுரை : மதுரை கலெக்டர் சகாயத்திற்கு 'எஸ்கார்ட்' போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் பரமக்குடி, மதுரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களையும், மதுரையில் கார்விபத்தில் பாதித்தவர்
களையும் பார்வையிட மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் சென்றார்.
அவரது காரை பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து தற்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஒரு எஸ்.ஐ., மற்றும் 4 போலீசார் இப்பாதுகாப்பு படையில் இருக்கின்றனர். இப்படையினருடன் நேற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் இறந்தவர்களின் உடலை உடனே பிரேத பரிசோதனை செய்து அனுப்பும்படி ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ராமானுஜத்திற்கு உத்தரவிட்டார். பொதுவாக கலெக்டர்களுக்கு தேர்தல் சமயத்தில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.


