/உள்ளூர் செய்திகள்/மதுரை/தனியார் கல்லூரி நர்ஸ்களுக்கு அரசுமருத்துவமனை பணி: எதிர்த்து மனு : தீர்ப்பு தள்ளிவைப்புதனியார் கல்லூரி நர்ஸ்களுக்கு அரசுமருத்துவமனை பணி: எதிர்த்து மனு : தீர்ப்பு தள்ளிவைப்பு
தனியார் கல்லூரி நர்ஸ்களுக்கு அரசுமருத்துவமனை பணி: எதிர்த்து மனு : தீர்ப்பு தள்ளிவைப்பு
தனியார் கல்லூரி நர்ஸ்களுக்கு அரசுமருத்துவமனை பணி: எதிர்த்து மனு : தீர்ப்பு தள்ளிவைப்பு
தனியார் கல்லூரி நர்ஸ்களுக்கு அரசுமருத்துவமனை பணி: எதிர்த்து மனு : தீர்ப்பு தள்ளிவைப்பு
மதுரை : அரசு மருத்துவமனைகளில் தனியார் கல்லூரிகளில் பயின்ற நர்ஸ்களுக்கு பணி வழங்கும் உத்தரவை எதிர்த்து அரசு கல்லூரிகளில் பயின்ற நர்ஸ்கள் தாக்கல் செய்த சீராய்னு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது.
மனு நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல்கள், ''ஐம்பது ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் பயின்றவர்களுக்கு நர்ஸ் பணி வழங்கப்படுகிறது. அதை மாற்ற கூடாது,'' என்றனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தனியார் கல்லூரிகளில் பயின்ற நர்ஸ்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ''தனியார் கல்லூரிகளில் பயின்றவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்க கூடாது என விதியில்லை. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்கலாம்,''என்றனர். கூடுதல் அட்வகேட் ஜெரனல் செல்லப்பாண்டியன், ''தனியார் கல்லூரியில் பயின்றவர்களுக்கு அரசு மருத்துவமனையில் பணி வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது,'' என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.


