/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வெளிமாநிலத்தில் தமிழக தேங்காய் விலை சரிவு : விலை ஏற்றத்தை எதிர்பார்த்த வியாபாரிகள் கலக்கம்வெளிமாநிலத்தில் தமிழக தேங்காய் விலை சரிவு : விலை ஏற்றத்தை எதிர்பார்த்த வியாபாரிகள் கலக்கம்
வெளிமாநிலத்தில் தமிழக தேங்காய் விலை சரிவு : விலை ஏற்றத்தை எதிர்பார்த்த வியாபாரிகள் கலக்கம்
வெளிமாநிலத்தில் தமிழக தேங்காய் விலை சரிவு : விலை ஏற்றத்தை எதிர்பார்த்த வியாபாரிகள் கலக்கம்
வெளிமாநிலத்தில் தமிழக தேங்காய் விலை சரிவு : விலை ஏற்றத்தை எதிர்பார்த்த வியாபாரிகள் கலக்கம்
தர்மபுரி: தமிழகத்தில் இருந்து, வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் தேங்காய் விலை சரிவடைந்துள்ளதால், விலை ஏற்றத்தை எதிர்பார்த்த வியாபாரிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், நெல்லை, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆற்றுப்படுகை பகுதியில் தென்னை விவசாயம் அமோகமாக நடந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வாரம் தோறும், ஒரு லட்சம் தேங்காய்கள் வெளிமாநில விற்பனைக்கு செல்கிறது. கடந்தாண்டு, ஜூன் முதல் நவம்பர் வரை தேங்காய் விலை, 6 முதல், 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு கடந்த சில மாதங்கள் வரை விலை இருந்த போதும், தற்போது, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் தேங்காய் அதிக அளவில் விற்பனைக்கு செல்கிறது. இதனால், தேங்காய் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. முதல் தர தேங்காய், 4.90 ரூபாய்க்கும், இரண்டாம் தர தேங்காய், 3.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை விட விலை சரிவடைந்துள்ளதால், வெளி மாநில விற்பனையை எதிர்பார்த்திருந்த வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கர்த்தானூரை சேர்ந்த தேங்காய் வியாபாரி ராமன் கூறியதாவது: உற்பத்தி அதிகரிப்பாலும், வெளிமாநிலங்களில் இருந்து தேங்காய் விற்பனைக்கு அதிகம் செல்வதாலும், தமிழக தேங்காய் விலை எப்போதும் இல்லாத வகையில் சரிந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை வாங்கி வந்து, உரித்து அனுப்ப செலவு அதிகரித்துள்ள நிலையில், விலை சரிவு தேங்காய் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


