Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தி.மு.க., யூனியன் சேர்மன் மீது முறைகேடு புகார்: கவுன்சிலர்கள் போர்க்கொடி

தி.மு.க., யூனியன் சேர்மன் மீது முறைகேடு புகார்: கவுன்சிலர்கள் போர்க்கொடி

தி.மு.க., யூனியன் சேர்மன் மீது முறைகேடு புகார்: கவுன்சிலர்கள் போர்க்கொடி

தி.மு.க., யூனியன் சேர்மன் மீது முறைகேடு புகார்: கவுன்சிலர்கள் போர்க்கொடி

ADDED : ஜூலை 24, 2011 01:11 AM


Google News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி யூனியன் சேர்மேன் தி.மு.க., வை சேர்ந்த வெங்கடப்பன் மீது அவரது கட்சி கவுன்சிலர்கள் முறைகேடு புகார் செய்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுது.

கிருஷ்ணகிரி யூனியன் சேர்மேனாக தி.மு.க.,வை சேர்ந்த வெங்கடப்பன் உள்ளார். துணை சேர்மேனாக தி.மு.க.,வை சேர்ந்த லோகநாதன் உள்ளார். நேற்று முன்தினம் நடந்த கவுன்சில் கூட்டத்தின் போது, மினிட் புக்கை கேட்டு தி.மு.க., மற்றும் பா.ம.க., கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டதோடு, அலுவலகம் எதிரே அடுப்பு மூட்டி சமையல் செய்தனர். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட பஞ்சாயத்து துணை இயக்குனர் வீரபத்திரன் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பி.டி.ஓ., அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



'கடந்த ஓராண்டாய் பொது நிதி ஒரு கோடியே 43 லட்ச ரூபாய் இருந்தும் கவுன்சிலர்களுக்கு எவ்விதமான பணிகளையும் ஒதுக்கவில்லை என்றும் உடனடியாக பணிகளை பிரித்து வழங்கும்படி கவுன்சிலர்கள் கேட்டனர். பொது நிதியில் இருந்து 50 சதவீதம் மட்டுமே பணிகள் செய்ய முடியும் என்றும் மற்றது டிபாசிட்டாக வைக்க வேண்டும் என்று அரசு விதிமுறைகள் உள்ளதால் அதனை கடைபிடிக்க வேண்டும்' என வீரபத்திரன் கேட்டு கொண்டார். ஆத்திரமடைந்த தி.மு.க., கவுன்சிலர்கள், 'கடந்த நான்கரை ஆண்டுகளாக யூனியனில் பல இடங்களில் பணிகள் நடத்தாமல் பணிகள் நடந்ததாக கவுன்சிலர்களுக்கு தெரியாமல் மினிட் புக்கில் பதிவு செய்து லட்சக்கணக்கான ரூபாயை அதிகாரிகள் துணையோடு சேர்மேன் வெங்கடப்பன் முறைகேடு செய்துள்ளதாக' புகார் தெரிவித்தனர்.



'கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் அந்த பகுதி கவுன்சிலர் மலர்விழிக்கு தெரியாமல் 20 லட்ச ரூபாய்க்கு மேல் பணிகள் செய்ததாக மினிட் புக்கில் உள்ளதாகவும் ஆனால் அது போன்ற பணிகள் எதுவும் நடக்கவில்லை' என்றனர். தொடர்ந்து பல்வேறு முறைகேடு புகார்களை அடுத்தடுத்து கூறினர். பின்னர் கவுன்சிலர்கள் பார்வைக்கு மினிட் புக் கொண்டு வரப்பட்டு பார்த்தனர். கடந்த 2010 ஜூன் மாதத்துக்கு பின் எந்த பணியும் செய்யவில்லை என்றும் மினிட் புக்கில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பணிகள் செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்' கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். கவுன்சிலர்கள் கூறிய புகார்களையும் பஞ்சாயத்து துணை இயக்குனர் வீரபத்திரன் பதிவு செய்து கொண்டு இது குறித்து கலெக்டரிடம் ஆலோசித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கவுன்சிலர்களுக்கு உறுதியளித்தார். இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us