Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"பண்பாட்டுப் பரிவர்த்தனை: சுற்றுலாவுக்கு பங்கு'

"பண்பாட்டுப் பரிவர்த்தனை: சுற்றுலாவுக்கு பங்கு'

"பண்பாட்டுப் பரிவர்த்தனை: சுற்றுலாவுக்கு பங்கு'

"பண்பாட்டுப் பரிவர்த்தனை: சுற்றுலாவுக்கு பங்கு'

ADDED : செப் 29, 2011 10:16 PM


Google News
கோவை : ''சுற்றுலாக்கள், சர்வதேச சமூகங்களுக்கு இடையேயான புரிதல்கள் மற்றும் பரஸ்பர மரியாதையை வளர்ப்பதாக இருக்கின்றன'' என்று, லெஷர் டிராவல்ஸ், தாமஸ் குக் முதன்மை மேலாளர் ஜனகவேலு பேசினார்.

அவினாசிலிங்கம் பல்கலை சுற்றுலா மேலாண்மைத் துறை சார்பில் உலக சுற்றுலா தினம், 'வாயேஜ் 2011' என்னும் பெயரில் பல்கலை வளாகத்தில் கொண்டாடப்பட்டது.விழாவில், லெசர் டிராவல்ஸ், தாமஸ் குக் முதன்மை மேலாளர் ஜனகவேலு பேசியதாவது: 'மிடில் கிளாஸ்' பட்ஜெட்டில் சுற்றுலா செல்வதற்கேற்ற வளரும் நாடுகள் என்று பார்தால், இந்தியா மற்றும் சீனா இரண்டும்தான் சரியான தேர்வென்று பன்னாட்டுச் சமூகம் நம்புகிறது. இவர்களில், பெரும்பான்மையோரின் விருப்பத் தேர்வு இந்தியாதான். பன்னாட்டு பண்பாட்டுப் பரிவர்த்தனையில் சுற்றுலாக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன; தகுதியான சாலைகள், வளர்ந்த நாடுகளுக்கு இணையான வசதிகள் கொண்ட விமான நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாக மாற்றும் போது, சுற்றுலாத்துறை இன்னும் வளர்ச்சி அடையும். இவ்வாறு, ஜனகவேலு பேசினார்.ஏர்அரேபியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் நிர்வாக மேலாளர் பாஸ்கரன் பேசியதாவது: சுற்றுலா, அலுவல் நிமித்தமாக, குடும்பத்தை காண, என, பயணங்களுக்கான காரணம் எதுவாக இருந்தாலும், அதன் இறுதி நோக்கம் மகிழ்ச்சியை மையப்படுத்தியதாகவே இருக்கிறது. இவை இனிய நிகழ்வாக இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள், நம்மை நம்பி தங்கள் பயணத்தை ஒப்படைக்கின்றனர். இவ்வாறு, பாஸ்கரன் பேசினார்.அறிவியல் துறை டீன் பர்வதம், வணிக மேலாண்மைத் துறை டீன் ஜெரீனாபீ, சுற்றுலா மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் பிந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us