/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அரசு கலைக் கல்லூரிக்கு மாவட்ட பா.ஜ., வரவேற்புஅரசு கலைக் கல்லூரிக்கு மாவட்ட பா.ஜ., வரவேற்பு
அரசு கலைக் கல்லூரிக்கு மாவட்ட பா.ஜ., வரவேற்பு
அரசு கலைக் கல்லூரிக்கு மாவட்ட பா.ஜ., வரவேற்பு
அரசு கலைக் கல்லூரிக்கு மாவட்ட பா.ஜ., வரவேற்பு
ADDED : ஆக 02, 2011 11:35 PM
சிவகாசி : திருத்தங்கலில் பாரதிய ஜனதா மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொதுச்செயலாளர் சவரணப்பெருமாள் தலைமையில் நடந்தது.
மாநில செயலாளர் சுரேந்திரன், கோட்ட அமைப்பு செயலாளர் அழகர்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். சாத்தூர் பகுதியில் கலை அறிவியல் கல்லூரி துவக்க ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், திருச்சுழி பகுதியில் கலை அறிவியல் கல்லூரி துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபாளையம் - சத்திரப்பட்டி, சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி - திருத்தங்கல் ரோட்டில் ரயில்வே மேம்பாலங்கள் அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் ஞானபண்டிதன், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசு, கனகராஜ், சோலையப்பன், ரமேஷ், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.