/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/இலவச பொருட்கள் வழங்கும் விழா புதுகையில் இன்று முதல் துவக்கம்இலவச பொருட்கள் வழங்கும் விழா புதுகையில் இன்று முதல் துவக்கம்
இலவச பொருட்கள் வழங்கும் விழா புதுகையில் இன்று முதல் துவக்கம்
இலவச பொருட்கள் வழங்கும் விழா புதுகையில் இன்று முதல் துவக்கம்
இலவச பொருட்கள் வழங்கும் விழா புதுகையில் இன்று முதல் துவக்கம்
ADDED : செப் 16, 2011 12:00 AM
புதுக்கோட்டை: அரசு சார்பில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், மாணவர்களுக்கு லேப்-டாப், சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கிராமப்புற ஏழை, எளியவர்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்கும் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்டங்கள்தோறும் இன்று முதல் இலவச பொருட்கள் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதிகுட்பட்ட கடம்பவயல் கிராமத்தில் இலவச பொருட்கள் வழங்கும் விழா இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது. ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வேம்பன்குடியில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள விழாவிலும், மணியம்பள்ளத்தில் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள விழாவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கந்தர்வக்கோட்டை தொகுதிகுட்பட்ட அண்டனூர், விராலிமலை தொகுதிக்குட்பட்ட களமாவூர் கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நாளை மாலை ஆடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. வரும் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு கந்தர்வக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கலெக்டர் மகேஸ்வரி தலைமையில் நடைபெறும் விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், எம்.பி., குமார், எம்.எல்.ஏ., க்கள் விஜயபாஸ்கர், ராஜநாயகம், வைரமுத்து, கு.ப.கிருஷ்ணன், முத்துக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச பொருட்களை வழங்குகின்றனர்.


