Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/அஞ்சல் ஊழியர்களுக்கு பாராட்டு விழா

அஞ்சல் ஊழியர்களுக்கு பாராட்டு விழா

அஞ்சல் ஊழியர்களுக்கு பாராட்டு விழா

அஞ்சல் ஊழியர்களுக்கு பாராட்டு விழா

ADDED : செப் 04, 2011 09:54 PM


Google News
தேனி:ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட பாலிசி சேகரிப்பில், மதுரை மண்டலத்தில் தேனி கோட்டம் முதல் இடம் பெற்றுள்ளது.

இதற்காக ஊழியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) நியூட்டன் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். போடி உப கோட்ட உதவி கண்காணிப்பாளர் ஆனந்தவேலு வரவேற்றார். தேனி கோட்ட உதவி கண்காணிப்பாளர் உமாராணி, பெரியகுளம் தலைமை அஞ்சலக அலுவலர் பரமசிவம், மதுரை மண்டல ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீட்டு உதவி வணிக மேலாளர் சிவநாதன் ஆகியோர் பேசினர். தேனி அஞ்சல் கோட்டத்தில் 17 ஆயிரத்து 500 பாலீஸிகள் பெற்று 62 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தேனி உதவி கோட்ட கண்காணிப்பாளர் அழகுபாண்டியன் சாதனை படைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தேனி கோட்ட அலுவலக உதவியாளர் விவேகானந்தன் தொகுத்து வழங்கினார். வணிக வளர்ச்சி அலுவலர் செல்லத்துரை நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us