/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கின்னஸ் சாதனை படைத்த ஓவியருக்கு முதல்வர் பாராட்டுகின்னஸ் சாதனை படைத்த ஓவியருக்கு முதல்வர் பாராட்டு
கின்னஸ் சாதனை படைத்த ஓவியருக்கு முதல்வர் பாராட்டு
கின்னஸ் சாதனை படைத்த ஓவியருக்கு முதல்வர் பாராட்டு
கின்னஸ் சாதனை படைத்த ஓவியருக்கு முதல்வர் பாராட்டு
ADDED : ஆக 09, 2011 02:54 AM
புதுச்சேரி : விதை ஓவியம் வரைந்து ஒரே நாளில் இரண்டு கின்னஸ், லிம்கா சாதனை படைத்த ஓவியர் விஜயலட்சுமியை, முதல்வர் ரங்கசாமி பாராட்டினார்.புதுச்சேரி லாஸ்பேட்டை சங்கரதாஸ் சுவாமிகள் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஓவியர் விஜயலட்சுமி.
கடந்தாண்டு டிசம்பரில் 16 சதுர மீட்டர் பரப்பளவில் உலகிலேயே மிகப் பெரிய ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்தார். அதே நாளில் 72 சதுர மீட்டர் பரப்பளவில் பீன்ஸ் விதைகளால் உலகிலேயே மிகப்பெரிய ஓவியம் தீட்டி மற்றொரு சாதனை படைத்தார்.இச்சாதனைகள் லிம்கா, எலைட் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.சாதனை படைத்த விஜயலட்சுமிக்கு ஆர்ய வைஸ்ய வாசவி திருமண மகாலில் பாராட்டு விழா நடந்தது. மகிளா பா தலைவி சசிரேகா வரவேற்றார். எலைட் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். சாதனை கலைஞர் விஜயலட்சுமியை, முதல்வர் ரங்கசாமி பாராட்டி பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆர்ய வைஸ்ய சமாஜத் தலைவர் தண்டாயுதம், கன்னிகா பரமேஸ்வரி கோவில் தலைவர் சதாசிவம், யுவன சேவா சங்கத் தலைவர் ரமேஷ், ஆன்மிக குழு பாலாஜி, தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபை தலைவர் தயானந்தகுப்தா குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.


