ADDED : ஆக 27, 2011 11:48 PM
தர்மபுரி: தர்மபுரியில் வக்கீல் சங்க தேர்தல் நடந்தது.
தர்மபுரி வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தர்மபுரி வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த 310 வக்கீல்களில் 297 பேர் ஓட்டு போட்டனர். இதில் தர்மபுரி வக்கீல்கள் சங்க தலைவராக ரவி, செயலாளராக பாலு, துணைத் தலைவராக கோவிந்தராஜ், துணை செயலாளராக வெங்கடேஸ், நூலகராக பாலாஜி ஆகியோர் வெற்றி பெற்றனர்.


