/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நிலுவை பணம் கிடைத்ததால் அறிவித்த போராட்டம் வாபஸ்நிலுவை பணம் கிடைத்ததால் அறிவித்த போராட்டம் வாபஸ்
நிலுவை பணம் கிடைத்ததால் அறிவித்த போராட்டம் வாபஸ்
நிலுவை பணம் கிடைத்ததால் அறிவித்த போராட்டம் வாபஸ்
நிலுவை பணம் கிடைத்ததால் அறிவித்த போராட்டம் வாபஸ்
ADDED : ஆக 01, 2011 11:53 PM
பந்தலூர் : நெல்லியாளம் நகராட்சியில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளின்
பயனாளிகளுக்கு நிலுவை பணம் வழங்கப்பட்டது.
பந்தலூர் நெல்லியாளம் நகராட்சி
சார்பில், 2008-09 நிதியாண்டில் முதல் வார்டுக்கு உட்பட்ட நெல்லியாளம்,
குண்டில் கடவு பகுதிகளை சேர்ந்த 12 பயனாளிகளுக்கு மாலை பகுதி மேம்பாட்டு
திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன்,
ஓப்பந்ததாரருக்கு பணி வழங்கப்பட்டு, பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால்,
தொகுப்பு வீடுகள் கட்டும் பணியில் ஈடுபட்ட பயனாளிகள் வீட்டு பணியை முழுமை
படுத்த முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். இது குறித்து 'தினமலரில்' செய்தி
வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில், பயனாளிகள்
12 பேருக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை முழுமையாக வழங்கப்பட்டது. இதனால்,
நடக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது.


