கம்பத்தில் துப்புரவு பணி தனியார் மயம்
கம்பத்தில் துப்புரவு பணி தனியார் மயம்
கம்பத்தில் துப்புரவு பணி தனியார் மயம்
ADDED : செப் 09, 2011 11:27 PM
கம்பம் : கம்பத்தில் துப்புரவு பணிகளை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கம்பம் நகராட்சியில் துப்புரவு பணியாளர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
பணியிடங்கள் சில காலியாக உள்ளது.சாக்கடை சுத்தம் செய்தல், குப்பைகள் அள்ளுதல், அள்ளிய குப்பைகளை குப்பைக் கிட்டங்கியில் சேர்த்தல் போன்ற பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.துப்புரவு பணிகளை தனியார்மயமாக்க சுகாதார அலுவலர் முயற்சி மேற்கொண்டார். பலமுறை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தும் பலனில்லை. எனவே துப்புரவு பணிகளில் தொடர்ந்து தேக்கநிலை காணப்படுகிறது. தற்போது கவுன்சிலின் பதவிக்காலம் முடிவிற்கு வர உள்ளது. இதனால் துப்புரவு பணிகளை தனியார்மயமாக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,' துப்புரவு பணிகள் முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. புதிய பணி யிடங்கள் நிரப்பவும் முடியவில்லை. நகராட்சியின் வருவாய் மற்றும் செல வினங்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எனவே தனியார் மயம் ஒன்றே தீர்வு. மண்டல இயக்குநரிடம் அனுமதி பெற்று, விரைவில் சில பகுதிகளின் துப்புரவு பணிகளை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளோம்' என்றார்.


