ADDED : ஆக 09, 2011 02:55 AM
வால்பாறை : ''வால்பாறை மலைப்பகுதியில் பணிபுரியும் போலீசார் சேவை மனப்பான்மையுடன் செயல்படவேண்டும்,'' என்று கோவை எஸ்.பி., உமா கூறினார்.வால்பாறை அடுத்துள்ள முடீஸ் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்த எஸ்.பி.,உமா, நிருபர்களிடம் கூறியதாவது:சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில் தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட தாசில்தார் மற்றும் வணிக வரித்துறையினரின் அனுமதி பெற வேண்டும்.
பெண் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதாலும், பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு வால்பாறையிலேயே தீர்வு காணும் வகையில் இரண்டு பெண் போலீசார் இந்தப்பகுதிக்கு நியமிக்கப்படுவார்கள். வால்பாறையின் சுற்றுச்சூழல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மலைப்பிரதேசமான வால்பாறையில் பணிபுரியும் போலீசார் சேவை மனப்பான்மையுடன் செயல்படவேண்டும் என்றார்.


