திருச்சி மேயர் பதவிக்கு 21 பேர் மனு தாக்கல்
திருச்சி மேயர் பதவிக்கு 21 பேர் மனு தாக்கல்
திருச்சி மேயர் பதவிக்கு 21 பேர் மனு தாக்கல்
திருச்சி : திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு மாற்று வேட்பாளர்கள் உட்பட, 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர் விஜயாவுடன், மாநகர மாவட்ட தலைவர் ஜெரோம் அரோக்கியராஜ், தெற்கு மாவட்ட தலைவர் சுப.சோமு உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், வேட்பாளர்களுடன் வந்தனர்.
தே.மு.தி.க., வேட்பாளர் சித்ராவுடன், திருவெறும்பூர் எம்.எல்.ஏ., செந்தில்குமார், மாவட்ட செயலர் விஜயராஜன், வடக்கு மாவட்ட தலைவர் நடராஜன், மாநில வர்த்தக அணி துணை செயலர் விஜயகுமார் ஆகியோர் உடன் வந்தனர்.
திரும்பி சென்ற மேயர் வேட்பாளர் : திருச்சி ஆண்டாள் வீதி, இச்சிமரச்சந்து பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி முருகேஸ்வரி, 47. இவர் தேசியவாத காங்கிரஸ் சார்பில் மேயர் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ய, மாநகராட்சி அலுவலகம் வந்தார். அங்கிருந்த நிருபர்களிடம் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடுதாகவும், வெற்றி பெற்றால் திருச்சி மாநகரில் பல்வேறு திட்டங்களை கொடுப்பதாகவும் கூறிச்சென்றார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் முன் வேட்பாளர் பெயர், வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது வேட்பாளர் பெயர், வாக்காளர் பட்டியலில் எங்கும் இல்லை. இதனால், தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முருகேஸ்வரி மற்றும் அவருடன் வந்த நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று மதியம் 3 மணி வரை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற, 10ம் தேதி மதியம் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


