Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அணைக்கு வரத்து அதிகரிப்பு மெல்ல உயருது நீர்மட்டம்

அணைக்கு வரத்து அதிகரிப்பு மெல்ல உயருது நீர்மட்டம்

அணைக்கு வரத்து அதிகரிப்பு மெல்ல உயருது நீர்மட்டம்

அணைக்கு வரத்து அதிகரிப்பு மெல்ல உயருது நீர்மட்டம்

ADDED : ஆக 29, 2011 12:06 AM


Google News
பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பொழிவு குறைந்திருந்தாலும், ஆழியாறு அணைக்கு நீர்வரத்துள்ளதால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.

பொள்ளாச்சி சமவெளி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், ஒரு மாதமாக பருவ மழை பெய்து வந்ததால், பி.ஏ.பி., திட்ட முக்கிய அணைகளான பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. மற்ற அணைகளான ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழை பொழிவு குறைந்ததால், அணைகளின் நீர் மட்டம் உயர்வது தடைப்பட்டது. தற்போது, ஒரு சில பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், ஆழியாறு அணையின் நீர் மட்டம் மீண்டும் உயரத்துவங்கியுள்ளது. சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 161.83 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,039 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. அணையிலிருந்து, 2,100 கன அடி தண்ணீர் வெளியேற்றமாகிறது. பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில் 71.90 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,345 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 2,425 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. ஆழியாறு அணையின் 120 அடி உயரத்தில் 115.20 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 499 கனஅடி தண்ணீர் வரத்தாகவும், 186 கனஅடி தண்ணீர் வெளியேற்றமாகவும் உள்ளது. திருமூர்த்தி அணையில் 46.21 அடியும், அமராவதி அணையில் 57.81 அடியும் நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 367 கன அடி தண்ணீர் வரத்தாகவும், அணையிலிருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றமாகிறது. நேற்று காலை 8.00 மணி வரை பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): சோலையாறில் 36, பரம்பிக்குளத்தில் 11, மேல்நீராறில் 46, கீழ் நீராறில் 28 , வால்பாறையில் 15.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us