/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் செப்.2ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம்புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் செப்.2ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம்
புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் செப்.2ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம்
புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் செப்.2ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம்
புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் செப்.2ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம்
கடையநல்லூர் : புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 20 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் வரும் செப்.2ம் தேதி நடக்கிறது என திருப்பணி கமிட்டி தலைவர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.
புளியங்குடியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2 தேர்கள் உள்ளன.
இதனையடுத்து பெரிய தேரினை சீரமைத்து புதியதாக புதிய தேர் உருவாக்கிட தேர் திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும் இந்த பணிக்காக ரூ.4 லட்சம் அறநிலையத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி புதிய தேர் உருவாக்கும் பணிகள் நடைபெற்று பணிகள் பெருமளவில் முடிவடைந்துவிட்டது. தேர் வெள்ளோட்டம் வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர் திருப்பணி கமிட்டி தலைவர் பாலாஜி கிரானைட் சங்கரநாராயணன் கூறியதாவது:- ''புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பெரிய தேர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை சார்பில் இப்பணிக்காக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. உபயதாரர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பணிகளின்படி சுமார் ரூ.20 லட்சம் செலவில் புதிதாக தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக தேர் ஓடவில்லை. கடந்த 2010ம் ஆண்டு இதற்கான பணிகள் பொன்னமராவதியை சேர்ந்த ஸ்பதி செல்வம் முன்னிலையில் தொடங்கப்பட்டது. திருச்சியில் உள்ள பெரிய நிறுவனங்கள் சார்பில் நான்கு சக்கரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பெரிய தேர் வெள்ளோட்டம் வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளோட்டம் மேற்கொள்ளக்கூடிய ரதவீதிகளில் சீரமைப்பு பணிகள் நடந்துள்ளது'' என்றார்.


