/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சித்தேரியில் கழிவு நீர் அகற்றம்ஆர்.டி.ஓ., அதிரடி நடவடிக்கைசித்தேரியில் கழிவு நீர் அகற்றம்ஆர்.டி.ஓ., அதிரடி நடவடிக்கை
சித்தேரியில் கழிவு நீர் அகற்றம்ஆர்.டி.ஓ., அதிரடி நடவடிக்கை
சித்தேரியில் கழிவு நீர் அகற்றம்ஆர்.டி.ஓ., அதிரடி நடவடிக்கை
சித்தேரியில் கழிவு நீர் அகற்றம்ஆர்.டி.ஓ., அதிரடி நடவடிக்கை
ADDED : செப் 07, 2011 10:17 PM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி சித்தேரியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
நேற்று அதிரடியாக அகற்றப்பட்டது.கள்ளக்குறிச்சி சித்தேரியில் பல்வேறு
பகுதிகளிலிருந்து வெளியேறும் மழை நீர் மற்றும் கழிவுநீர் தேங்கியதால்
பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
நேற்று முன்தினம் ஏரியில் தேங்கி நிற்கும்
கழிவு நீரை வெளியேற்ற கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள்
முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.இதனையடுத்து நேற்று காலை ஆர்.டி.ஓ., உமாபதி
உத்தரவின்படி பொக்லைன் உதவியுடன் வாய்க்கால் தூர் எடுத்து கழிவு நீர்
அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தாசில்தார் வைகுண்டவரதன், பொதுப்பணித்துறை
உதவி பொறியாளர் அருணகிரி, நகராட்சி ஆணையர் பாலமுருகன், கவுன்சிலர் குட்டி,
இன்ஸ்பெக்டர் விவோகனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.


