Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலத்தில்மேயர் வேட்பாளரை ஆதரித்து இன்று பிரேமலதா பிரச்சாரம்

சேலத்தில்மேயர் வேட்பாளரை ஆதரித்து இன்று பிரேமலதா பிரச்சாரம்

சேலத்தில்மேயர் வேட்பாளரை ஆதரித்து இன்று பிரேமலதா பிரச்சாரம்

சேலத்தில்மேயர் வேட்பாளரை ஆதரித்து இன்று பிரேமலதா பிரச்சாரம்

ADDED : அக் 07, 2011 01:39 AM


Google News
சேலம்: சேலம் மாநகராட்சி தே.மு.தி.க., மேயர் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, சேலத்தில், பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

தமிழகத்தில், அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும், தே.மு.தி.க., கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று, சேலம் மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரிக்க உள்ளார்.

இன்று மாலை 3.30 மணிக்கு, அம்மாபேட்டை காந்தி மைதானம், 4 மணிக்கு வலசையூர், 4.30 மணிக்கு மன்னார்பாளையம் பிரிவு ரோடு, 5 மணிக்கு ஜான்சன்பேட்டை, 5.30 மணிக்கு கோரிமேடு, 6.30 மணிக்கு பச்சப்பட்டி, 7 மணிக்கு பட்டக்கோவில், 7.30 மணிக்கு பால் மார்க்கெட், 8 மணிக்கு சிவதாபுரம், 8.30 மணிக்கு மணியனூர், 9 மணிக்கு தாதகாப்பட்டி ஆகிய இடங்களில், தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து, பிரச்சாரம் செய்கிறார்.மேற்கண்ட இடங்களுக்கு, தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என, மேயர் வேட்பாளர் இளங்கோவன், மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us