/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உணவு பதப்படுத்துதல் இலவச பயிற்சி துவக்கம்உணவு பதப்படுத்துதல் இலவச பயிற்சி துவக்கம்
உணவு பதப்படுத்துதல் இலவச பயிற்சி துவக்கம்
உணவு பதப்படுத்துதல் இலவச பயிற்சி துவக்கம்
உணவு பதப்படுத்துதல் இலவச பயிற்சி துவக்கம்
ADDED : ஆக 05, 2011 04:13 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் உணவு பதப்படுத்துதல் குறித்த இலவச பயிற்சி,
வரும் 8ம் தேதி துவங்குகிறது.சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம்
(சிப்போ), மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்துடன் இணைந்து,
தொழில் முனைவோருக்கு உணவு பதப்படுத்துதல் குறித்து 6 வார கால இலவச பயிற்சி
அளிக்க உள்ளது.புதுச்சேரியில் இப்பயிற்சி, வரும் 8ம் தேதி துவங்குகிறது.
உணவுப் பதப்படுத்துதல் தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தவறிய ஆண், பெண் இருபாலரும் இப்
பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில், உணவு பதப்படுத்துதல்
தொழிலுக்கான வாய்ப்புகள், வங்கிக் கடனுதவி, மான்யங்கள், தேவையான
உபகரணங்கள், தரக்கட்டுப்பாடு ஆகியவை குறித்து அந்தந்தத் துறை சார்ந்த
வல்லுனர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.பயிற்சியில் கலந்து கொள்ள
விருப்பம் உள்ளவர்கள், 0452 2602339, 0452 2602511 ஆகிய தொலைபேசி எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


