/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"அடுத்த பணியை சிறப்பாக செய்ய நம்மை நாமே பாராட்டிக் கொள்ள வேண்டும்'"அடுத்த பணியை சிறப்பாக செய்ய நம்மை நாமே பாராட்டிக் கொள்ள வேண்டும்'
"அடுத்த பணியை சிறப்பாக செய்ய நம்மை நாமே பாராட்டிக் கொள்ள வேண்டும்'
"அடுத்த பணியை சிறப்பாக செய்ய நம்மை நாமே பாராட்டிக் கொள்ள வேண்டும்'
"அடுத்த பணியை சிறப்பாக செய்ய நம்மை நாமே பாராட்டிக் கொள்ள வேண்டும்'
ADDED : அக் 06, 2011 09:37 PM
கோவை : ''நம் செயலை நாமே பாராட்டிக்கொண்டால், அடுத்த பணியை சிறப்பாக செய்யலாம்,'' என, பி.பி.ஜி., கல்வியியல் கல்லூரி முதல்வர் மேரி லில்லி புஷ்பம் பேசினார்.
கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், கல்லூரி சங்க துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) இந்திராணி தலைமை வகித்தார். பி.பி.ஜி., கல்வியியல் கல்லூரி முதல்வர் மேரி லில்லி புஷ்பம் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரிக்கென்று தனி பெருமை உள்ளது. ஆசிரியர் என்பவர் வருங்கால இந்தியாவை உருவாக்கும் சிற்பிகள். சிற்பத்தை செதுக்கும்முன் அதன் தன்மையை சிற்பி எவ்வாறு அறிந்து கொள்வாரோ அதுபோல்தான், ஆசிரியர்களும் மாணவர்களின் தனித்திறனை அறியும் ஆற்றல் படைத்தவர்கள். ஆசிரியர் பணிக்கு விரும்பி வந்தாலும், விரும்பாமல் வந்திருந்தாலும் பணியை சிறப்பாக மெற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தகுதி, தரம், குணம், திறமையுடன் மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். தொடர்ந்து பாடங்கள் நடத்தும்போது திறமை மேம்படுகிறது. நேற்றைய மாணவர்கள் இன்று படிப்பதை நிறுத்தி விட்டால், நாளை படிக்காதவர்களாகிவிடுவர். ஆசிரியர்களாக பணியாற்றும்போது நேர்மையோடு உழைக்க வேண்டும். திறமை அதிகரிக்க அதிகரிக்கத்தான் மதிப்பும் அதிகரிக்கும். மாணவ, மாணவியர் தங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது அவ சியம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுய ஒழுக்கம், கட்டுப்பாடு குறித்து விளக்க வேண்டும்; அவர்கள் கல்வியில் சிறக்க ஊக்கப்படுத்த வேண்டும். நம் செயலை நாமே பாராட்டிக்கொண்டால், அடுத்த பணியை சிறப்பாக செய்ய முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.கல்லூரி சங்க தலைவியாக ஜெயபிரதா, செயலா ளராக சத்யவதி, துணைத்தலைவியாக டெஸ்சிராணி, பொருளாளராக பானுபிரியா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


