/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/4 நாளில் 11 காசு சரிவு தமிழகம், கேரளாவில் முட்டை விலை 257காசாக நிர்ணயம்4 நாளில் 11 காசு சரிவு தமிழகம், கேரளாவில் முட்டை விலை 257காசாக நிர்ணயம்
4 நாளில் 11 காசு சரிவு தமிழகம், கேரளாவில் முட்டை விலை 257காசாக நிர்ணயம்
4 நாளில் 11 காசு சரிவு தமிழகம், கேரளாவில் முட்டை விலை 257காசாக நிர்ணயம்
4 நாளில் 11 காசு சரிவு தமிழகம், கேரளாவில் முட்டை விலை 257காசாக நிர்ணயம்
ADDED : ஜூலை 12, 2011 12:45 AM
நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 257 காசுகளாக நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு தினங்களில் முட்டை விலை, 11 காசுகள்
சரிந்திருப்பது, கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு
கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து
பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 262 காசுகளுக்கு விற்பனை
செய்யப்பட்ட முட்டை, 5 காசுகள் குறைத்து, 257 காசுகளாக நிர்ணயம்
செய்யப்பட்டது. கடந்த, 6ம் தேதி முட்டை விலை, 268 காசுகளாக நிர்ணயம்
செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து, 7ம் தேதி, 6 காசுகள் குறைந்து, 262
காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. அந்த விலை தொடர்ந்து மூன்று தினம் நீடித்து
வந்த நிலையில், அதன் விலை, 5 காசுகள் குறைத்து, 257 காசாக நிர்ணயம்
செய்யப்பட்டது. கடந்த நான்கு தினங்களில் முட்டை விலை, 11 காசுகள்
குறைந்திருப்பது, கோழிப்பண்ணையாளர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை விபரம்: ஹைதராபாத், 239 காசுகள்,
விஜயவாடா, தனுகு, 245 காசுகள், சென்னை, 268 காசுகள், மைசூரு, 257 காசுகள்,
பெங்களூரு, 260 காசுகள், மும்பை, 267 காசுகள், டில்லி, 243 காசுகள்,
பர்வாலா, 228 காசுகள், கோல்கத்தா, 280 காசுகள். இவ்வாறு நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள்
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ, 40 ரூபாயாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை கிலோ, 47 ரூபாயாக
நிர்ணயிக்கப்பட்டது.


