/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வி.எச்.பி., சார்பில் கிருஷ்ண ஜெயந்திவி.எச்.பி., சார்பில் கிருஷ்ண ஜெயந்தி
வி.எச்.பி., சார்பில் கிருஷ்ண ஜெயந்தி
வி.எச்.பி., சார்பில் கிருஷ்ண ஜெயந்தி
வி.எச்.பி., சார்பில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED : ஆக 21, 2011 11:37 PM
திருப்பூர் : விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், திருப்பூர் சுற்றுப்பகுதியில்
41 இடங்களில் கிருஷ்ணர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, கிருஷ்ண ஜெயந்தி விழா
கொண்டாடப்பட்டது.
பொதுமக்கள் இடையே பக்தியை வளர்க்கும் விதமாக, விசுவ
ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ணர் சிலைகளை பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை
செய்து, நேற்று வழிபாடு நடத்தப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழா
கொண்டாடுவதற்காக, திருப்பூரில் 41 இடங்களில் கிருஷ்ணர் சிலைகள் பிரதிஷ்டை
செய்யப்பட்டன. கடந்த 18ம் தேதி, பக்தர்களுக்கு கங்கனம் கட்டும் விழா
நடந்தது. நேற்று காலை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலை 5.00 மணிக்கு
சுதர்ஸன ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள்
வழங்கப்பட்டன. இன்று நடக்கும் விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளில்
வைக்கப்பட்டுள்ள சிலைகள் ராயபுரம் கிருஷ்ணர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச்
சென்று கூட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. கிருஷ்ணர் கோவிலில் இருந்து
ஊர்வலமாக புறப்படும் பக்தர்கள், கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமி அம்மாள்
உயர்நிலைப்பள்ளியை சென்றடைகின்றனர். அங்கு நடக்கும் நிறைவு விழா
கூட்டத்தில், விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் பேசுகின்றனர். விழா
ஏற்பாடுகளை திருப்பூர் கோட்ட விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர்செய்துள்ளனர்.


