"பறக்கும் தேள்'; பரப்புது நறுமணம்!
"பறக்கும் தேள்'; பரப்புது நறுமணம்!
"பறக்கும் தேள்'; பரப்புது நறுமணம்!
ADDED : ஜூலை 31, 2011 10:47 PM
ஊட்டி : 'பறக்கும் தேள்' எனப்படும், 'சாக்லெட்' மணம் வீசும் ஆர்கிட் மலர்கள் நீலகிரி மாவட்டத்துக்கு தனிச்சிறப்பு சேர்க்கின்றன.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அபூர்வ தாவர வகைகள் உள்ளன. இவற்றில் ஆர்கிட் மலர்ச்செடிகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றை அழியாமல் காக்கும் முயற்சியாக, தாவரவியல் விஞ்ஞானிகள் திசுவளர்ப்பு கூடம் மூலம் அதிகளவில் பெருக்கம் செய்து வருகின்றனர். சில தனியார் ஆர்வலர்களும் தற்போது ஆர்கிட் மலர்களை வளர்த்து வருகின்றனர். இவ்வகை மலர்களில், 'ஸ்டெனோபியா' என்னும் தாவரவியல் பெயர் கொண்ட ஆர்கிட் மலர்ச்செடி, தனித்துவம் வாய்ந்தது. 'சாக்லெட்' மணம் வீசும் மலர்களை கொண்டது இச்செடி. மலர்கள் தோற்றத்தில் தேள் உருவத்தை ஒத்திருப்பதால், இதற்கு 'பறக்கும் தேள்' என்ற சிறப்பு பெயரும் உண்டு. தற்போது இந்த மலர்கள், தாவணெ கிராமத்தில் உள்ள சந்திரமால் என்பவரின் வீட்டில் வளர்ந்துள்ளன. இம்மலர்கள் வளர்ந்து 10 நாட்கள் அப்படியே வாடாமல் இருக்கும். இவை வளர்க்கப்படும் இடங்களில் சாக்லெட் மணம் வீசுவதால் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பசுமை குடில்களில் இம்மலர்கள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்துக்கு தனிச்சிறப்பு சேர்க்கப்படும் இத்தகைய மலர்கள், கொய் மலர் ஏற்றுமதியாளர்கள் சார்பில் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.


