Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேங்காய் வியாபாரியிடம் திருட்டு

தேங்காய் வியாபாரியிடம் திருட்டு

தேங்காய் வியாபாரியிடம் திருட்டு

தேங்காய் வியாபாரியிடம் திருட்டு

ADDED : ஜூலை 26, 2011 09:18 PM


Google News

உடுமலை : உடுமலை அருகே தேங்காய் வியாபாரியிடமிருந்து 3 லட்சம் ரூபாய் பணம் திருடியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குடிமங்கலம் ராமச்சந்திராபுரம் இலுப்பநகரம் கிழக்கு தோட்டத்தை சேர்ந்த நடராஜன் மகன் கணேசன்(40); இவருக்கு கொப்பரை தேங்காய் களம் உள்ளது. இவர் நேற்று காலை 11.00 மணிக்கு பெதப்பம்பட்டியிலுள்ள பாரோடா வங்கியிலிருந்து 3 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு, டி.என். 41 ஏசி 6348 என்ற எண்ணுடைய ஹீரோ ஹோண்டா பைக்கில் சென்றுள்ளார். பெதப்பம்பட்டி நால்ரோட்டிலுள்ள பேன்சி கடையில் பொருள் வாங்குவதற்காக வண்டியினை நிறுத்தி சென்றுள்ளார். பொருள் வாங்கிக்கொண்டு வந்த போது வண்டியிலிருந்த பணம் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். குடிமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தார். எஸ்.ஐ., தமிழ்மணி தலைமையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us