வழக்கை வாபஸ் பெற மிரட்டல் : சுப்ரமணியசாமிக்கு நோட்டீஸ் : ஐகோர்ட் கிளை உத்தரவு
வழக்கை வாபஸ் பெற மிரட்டல் : சுப்ரமணியசாமிக்கு நோட்டீஸ் : ஐகோர்ட் கிளை உத்தரவு
வழக்கை வாபஸ் பெற மிரட்டல் : சுப்ரமணியசாமிக்கு நோட்டீஸ் : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை : வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியதாக மக்கள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் நிர்வாக டிரஸ்டி தாக்கல் செய்த மனு குறித்து ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி, மாநில தலைவர் சந்திரலேகாவுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
இக்கவுன்சில் நிர்வாக டிரஸ்டி ரமேஷ் தாக்கல் செய்த ரிட் மனு: மதுரை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு 2008 ஜூன் 4ல் நான் சென்ற போது, ஜனதா கட்சி நகர் தலைவர் கருணாகரன், ரவி மற்றும் எட்டு பேர் எங்களை மிரட்டினர்.
ஐகோர்ட் கிளை உத்தரவின்படி உதவி கமிஷனர் முன் ஆஜரானேன். ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி, மாநில தலைவர் சந்திரலேகா போன் மூலம் கருணாகரன் மீது வழக்கு பதிய கூடாது என நிர்பந்தித்தனர். கருணாகரனை தப்பி வைக்கும் நோக்கத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஐகோர்ட் கிளையில் மனு செய்தேன்.
சுப்ரமணியசாமி தூண்டுதல் பேரில் சிலர் என்னை மிரட்டுகின்றனர். சுப்ரமணியசாமி, சந்திரலேகா மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதி ஆர்.மாலா முன் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி சுப்ரமணியசாமி, சந்திரலேகாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.


