தனியார் நிறுவன மேலாளர் வெட்டிக் கொலை கோவையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்
தனியார் நிறுவன மேலாளர் வெட்டிக் கொலை கோவையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்
தனியார் நிறுவன மேலாளர் வெட்டிக் கொலை கோவையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்
கோவை : தனியார் நிறுவனத்தின் மேலாளரை வெட்டி கொலை செய்து, பணத்தை கொள்ளையடித்து, காரை கடத்தி சென்ற கொள்ளை கும்பலை, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
நேற்று அதிகாலை 3.45 மணிக்கு, கோவை சிங்காநல்லூர் வந்த இவர், அலுவலக கேட்டைத் திறந்து, மாடிப்படி அருகே சென்றார். அப்போது, நிறுவன உரிமையாளரின், 'ஸ்விப்ட்' காரின் பின்னால் மறைந்திருந்த மர்ம நபர்கள், சத்திய மூர்த்தியை இரும்பு கம்பியால் தாக்கினர். சாவியை பறித்து, சமையல் அறைக்கு இழுத்து சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த அரிவாளால் வெட்டி கொலை செய்து, லுங்கியால் முகத்தை மூடி, வீட்டின் பின்புறம் வீசினர். பிறகு அவரிடமிருந்த பர்ஸ், மொபைல் போன் மற்றும் பீரோவில் இருந்த 14 ஆயிரம் ரூபாயை திருடிய ஆசாமிகள், காரையும் திருடி சென்றனர்.
நேற்று காலை 9.30 மணிக்கு, கம்பெனிக்கு வந்த டிரைவர் தன்ராஜ், கார் இல்லாததால் வீட்டின் பின்பகுதிக்கு சென்று பார்த்தார். மேலாளர் சத்திய மூர்த்தி கொலையுண்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர், பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் கமிஷனர், துணைக் கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர் ஆகியோர், சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணையை துவக்கினர்.
அமைச்சரின் உறவினர் :கொலையான மேலாளர் சத்தியமூர்த்தியிடம் திருடிய மொபைல் போன், பெருந்துறை அருகே, 'ஸ்விட்ச் ஆப்' செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்தி, தமிழக நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்தின் உறவினர்.