/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/கணவன் மனைவி சண்டையில் சமாதானம் செய்த மைத்துனன் குத்தி கொலை, அத்தான் கைதுகணவன் மனைவி சண்டையில் சமாதானம் செய்த மைத்துனன் குத்தி கொலை, அத்தான் கைது
கணவன் மனைவி சண்டையில் சமாதானம் செய்த மைத்துனன் குத்தி கொலை, அத்தான் கைது
கணவன் மனைவி சண்டையில் சமாதானம் செய்த மைத்துனன் குத்தி கொலை, அத்தான் கைது
கணவன் மனைவி சண்டையில் சமாதானம் செய்த மைத்துனன் குத்தி கொலை, அத்தான் கைது
ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழியில் கணவன் மனைவி சண்டையை சமாதானம் செய்து வைக்க சென்ற மைத்துனர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆரல்வாய்மொழி மருத்துவர் நகர் பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்தவர் மலைராஜன் மகன் சுரேஷ் (27) கட்ட தொழிலாளி. இவரது மனைவி மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு ஓன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. சுரேசின் சகோதரி சுலோச்சனா என்ற நூர்ஜஹான். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கேரளம் மாநிலத்தை சேர்ந்த அப்துல்ரகீம் மகன் அப்துல் சுப்பு (42) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்து கோவையில் வசித்து வந்த இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆரல்வாய்மொழி மருத்துவர்நகரில் குடிபெயர்ந்தனர். இங்கு அப்துல் சுப்பு மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
நூர்ஜஹானுக்கும், அப்துல்சுப்புவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சுரேஷ் சென்று இருவரையும் சமாதானம் செய்து வைத்து வருவாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் கடுமையாக சண்டை நடந்துள்ளது. சுரேஷ் சென்று சமாதானம் செய்து வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை ஒன்றரை மணியவில் மீண்டும் அவர்கள் சண்டை போட்டுள்ளனர். சத்தம் கேட்டு சுரேஷ் அவர்கள் வீட்டிற்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த அப்துல்சுப்பு தான் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து சுரேசின் கழுத்தில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே விழந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல்மணி, சப் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் ஆகியோர் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல்சுப்புவை கைது செய்துள்ளனர்.


