/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இயற்கை வழி ஆவியாக்கலுக்கு ஐ.ஐ.டி., அங்கீகாரம்இயற்கை வழி ஆவியாக்கலுக்கு ஐ.ஐ.டி., அங்கீகாரம்
இயற்கை வழி ஆவியாக்கலுக்கு ஐ.ஐ.டி., அங்கீகாரம்
இயற்கை வழி ஆவியாக்கலுக்கு ஐ.ஐ.டி., அங்கீகாரம்
இயற்கை வழி ஆவியாக்கலுக்கு ஐ.ஐ.டி., அங்கீகாரம்
திருப்பூர் : இயற்கை முறையில் ஆவியாக்கும் தொழில்நுட்பத்துக்கு, இந்திய தொழில்நுட்பக்கழகம்(ஐ.ஐ.டி.,) அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இயற்கை முறையில் ஆவியாக்கும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என, இந்திய தொழில்நுட்பக்கழகத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்தது. ஆய்வு பணிக்காக, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்திய தொழில்நுட்பக்கழக பேராசிரியர்கள் நேரில் ஆய்வு செய்தபோது, 'எவாப்ரேட்டர்' பிரிவுக்கு சரியான மாற்றுவழி என ஏற்றுக்கொண்டனர். இருப்பினும், சோதனை ஓட்டத்தின் மூலமாக மட்டுமே அங்கீகாரம் வழங்க முடியும் என்ற நிலை இருந்தது. அதற்காக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழக வளாகத்திலும் மாதிரி கட்டமைப்பை ஏற்படுத்தி சோதனை முறையில் இயக்க முடிவு செய்யப்பட்டது. பெருந்துறையில் இயங்கும் மாதிரி கட்டமைப்பிலும், தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக, சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில், கழிவுநீரை ஆவியாக்கும் செயல்பாட்டுக்கு, இயற்கை முறையில் ஆவியாக்கும் தொழில்நுட்பம் சரியான மாற்றுத்தீர்வாக அமையும் என்று தெரியவந்தது.
அதன்படி, இயற்கை முறையில் ஆவியாக்கும் தொழில்நுட்பத்துக்கு, ஐ.ஐ.டி., சார்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிப்ட்-டீ கல்லூரி தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில்,'' இந்திய தொழில்நுட்பக் கழகம், இயற்கை முறையில் ஆவியாக்கும் தொழில்நுட்பத்தை, எளிய முறையில் பயன்படுத்தும், திறமை வாய்ந்த தொழில்நுட்பம் என்றும், இயற்கையை மாசுபடுத்தாமல், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை எளிதாக எட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளது. மாதிரி கட்டமைப்பு அருகே காற்று பரிசோதனை நடத்தியதில் எவ்வித இடர்பாடும் ஏற்படவில்லை. இயற்கை முறையில் ஆவியாக்கும் திட்டம் முழு திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்,'' என்றார்.