/உள்ளூர் செய்திகள்/சேலம்/பெண்களிடம் தாலியை நூதன முறையில் "அபேஸ்' செய்த கில்லாடி பெண் "எஸ்கேப்'பெண்களிடம் தாலியை நூதன முறையில் "அபேஸ்' செய்த கில்லாடி பெண் "எஸ்கேப்'
பெண்களிடம் தாலியை நூதன முறையில் "அபேஸ்' செய்த கில்லாடி பெண் "எஸ்கேப்'
பெண்களிடம் தாலியை நூதன முறையில் "அபேஸ்' செய்த கில்லாடி பெண் "எஸ்கேப்'
பெண்களிடம் தாலியை நூதன முறையில் "அபேஸ்' செய்த கில்லாடி பெண் "எஸ்கேப்'
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே திருமணமான, 50க்கும் மேற்பட்ட பெண்களிடம், விருத்தாச்சலத்தை சேர்ந்த பெண் ஒருவர், நூதன முறையில் தாலியை, 'அபேஸ்' செய்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதை வாங்கிய ராணி, தங்கியிருந்த வீட்டினுள் பூஜை செய்து, அருள் வாக்கும் தெரிவித்து வந்துள்ளார். ஒரு வாரம் கடந்த நிலையில், குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.,), வாங்கி பள்ளி சேர்த்துவிட்டு, கேரளாவில் உள்ள குருவை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு ராணியும் அவரது கணவரும் கிளம்பியுள்ளனர். ஆனால், இதுநாள் வரை அவர்கள் வராததால், நகை கொடுத்து ஏமாந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள், தம்பதியினர் தங்கியிருந்த வீட்டை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, பூஜைக்காக கொடுக்கப்பட்ட தாலி உள்ளிட்ட எந்த பொருட்களும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாரிடம், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தம்மம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


