/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சுயேட்சை வேட்பாளர்களால் அரசியல் கட்சியினர் கலக்கம்சுயேட்சை வேட்பாளர்களால் அரசியல் கட்சியினர் கலக்கம்
சுயேட்சை வேட்பாளர்களால் அரசியல் கட்சியினர் கலக்கம்
சுயேட்சை வேட்பாளர்களால் அரசியல் கட்சியினர் கலக்கம்
சுயேட்சை வேட்பாளர்களால் அரசியல் கட்சியினர் கலக்கம்
ADDED : அக் 11, 2011 01:57 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றி கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியால் கலக்கம் அடைந்துள்ளனர்.ஊத்தங்கரை டவுன் பஞ்சாயத்தில் 11 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 924, பெண் வாக்காளர்களும் 5 ஆயிரத்து 952 வாக்காளர்கள் உள்ளனர். டவுன் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் எட்டு பேர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க., சார்பில் சாகுல் அமீது, அமானுல்லா (தி.மு.க.,),, பூபதி (காங்.,), கோவிந்தராஜூலு (தே.மு.தி.க.,), நகுலன் (பா.ம.க.,) உட்பட எட்டு பேர் போட்டியிடுகின்றனர்.அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முஸ்லிம்களின் ஓட்டுகள் பிரிகிறது. காங்கிரஸ் வேட்பாளர் முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் முதலியார் மற்றும் வாணியர் சமுதாய ஓட்டுகள் கிடைக்கும் என்றும் நம்புகிறார்.தே.மு.தி.க., வேட்பாளர் கோவிந்தராஜூலு தனது பங்கிற்கு கணிசமான ஓட்டுக்களை பிரிக்கிறார். ஊத்தங்கரை டவுன் பஞ்சாயத்து தலைவராக இருந்த ஜெயலட்சுமி சுயேச்சையாக போட்டியிடுவதால் எஸ்.சி., ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்காது என அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.அ.தி.மு.க., வேட்பாளர் சாகுல் அமீதுக்கு மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தி.மு.க., வேட்பாளர் ஒவ்வொரு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் பூபதியும் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தலில் எட்டு பேர் போட்டியிட்டாலும் அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., சுயேச்சை வேட்பாளர் ஜெயலட்சுமி ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


