/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தேர்தல் விதி மீறல்: 24 வழக்குகள் பதிவுதேர்தல் விதி மீறல்: 24 வழக்குகள் பதிவு
தேர்தல் விதி மீறல்: 24 வழக்குகள் பதிவு
தேர்தல் விதி மீறல்: 24 வழக்குகள் பதிவு
தேர்தல் விதி மீறல்: 24 வழக்குகள் பதிவு
ADDED : அக் 11, 2011 02:21 AM
திருவள்ளூர் : தேர்தல் விதிகளை மீறியதாக திருவள்ளூர் போலீஸ் மாவட்டத்தில், இதுவரை 24 தேர்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருவள்ளூர் போலீஸ் மாவட்டத்துக்குட்பட்டு இரண்டு நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 11 ஒன்றிய பி.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் தேர்தல் விதிகளை மீறியதாக நேற்று வரை ஒரு அ.தி.மு.க., வேட்பாளர் மீதும், 4 தி.மு.க., வினர், 2 கம்யூனிஸ்ட் கட்சியினர், 4 தே.மு. தி.க.,வினர், 13 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 24 வேட்பாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை கண்காணிக்க தேர்தல் நன்னடத்தை கண்காணிப்புக் குழு, பறக்கும் படை, வீடியோ கண்காணிப்புக்குழு, விளம்பரங்கள் கண்காணிப்புக்குழு உட்பட, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை மீறுவோர் மீது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பாதுகாப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனின் உத்தரவை கடைபிடிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.


