/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரிதிமுக., மாணவர் அணி ஆர்ப்பாட்டம்சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரிதிமுக., மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரிதிமுக., மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரிதிமுக., மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரிதிமுக., மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2011 01:06 AM
தூத்துக்குடி: தமிழக அரசு உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்த
வலியுறுத்தி நேற்று திமுக மாணவர் அணி நிர்வாகிகளுடன் இணைந்து தனியார்
கல்லூரி, பள்ளி மாணவர்கள் தூத்துக்குடியில் வகுப்புகளை புறக்கணித்து
ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழகத்தில் கடந்த இரண்டு மாதமாக பள்ளிகளில்
வகுப்புகள் நடக்கவில்லை.
சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு அமல்படுத்தாமல்
மாணவர்களின் படிப்பினை வீணாக்கி வருவதாக திமுக சார்பில்
குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று மாணவர்கள் வகுப்புகளை
புறக்கணித்து திமுக மாணவர் அணியுடன் இணைந்து அமைதி போராட்டத்தில் ஈடுபட
திமுக அழைப்பு விடுத்திருந்தது.தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட திமுக
செயலாளர் பெரியசாமி உத்தரவின் பேரில் திமுக மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்
வக்கீல் ஜான் அலெக்சாண்டர் தலைமையில், மாணவர் அணி நிர்வாகி 8வது வார்டு
கவுன்சிலர் சுரேஷ்குமார் மற்றும் மாணவர் அணியினர் நேற்று தூத்துக்குடி
மில்லர்புரம் ரோட்டில் திரண்டனர். அவர்களுடன் அந்த பகுதியில் உள்ள அரசு
உதவி பெறும் தனியார் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு
அரசு உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டம்
செய்தனர். தமிழக அரசு மாணவர்களின் படிப்பினை வீணாக்காமல் உடனே சமச்சீர்
கல்வி புத்தகத்தை வழங்கு என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள்
எழுப்பப்பட்டன.மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்
ஜெயக்குமார்ரூபன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ராஜா, வக்கீல்
ஆனந்த்கேபிரியல், கவுன்சிலர் இசக்கிமுத்து, பாலு உள்ளிட்ட திமுக
நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாவட்டம் முழுவதும் திமுக
அறிவிப்பை தொடர்ந்து கல்லூரி பள்ளிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டிருந்தது. நாளை மறுநாள் திங்கட்கிழமை திமுகவினர் மீது அரசு பொய்
வழக்கு போடுவதை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திமுக சார்பில்
நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்
என்று மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி அழைப்பு விடுத்துள்ளார்.