Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பயிற்சியாளர்கள் இல்லாததால் பயன்படாத விளையாட்டு அரங்கங்கள்

பயிற்சியாளர்கள் இல்லாததால் பயன்படாத விளையாட்டு அரங்கங்கள்

பயிற்சியாளர்கள் இல்லாததால் பயன்படாத விளையாட்டு அரங்கங்கள்

பயிற்சியாளர்கள் இல்லாததால் பயன்படாத விளையாட்டு அரங்கங்கள்

ADDED : ஆக 06, 2011 10:30 PM


Google News
தேனி:பயிற்சியாளர்கள் இல்லாததால் மாவட்ட விளையாட்டு அரங்கங்கள் பயனின்றி உள்ளன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சில மாவட்டங்களில் தடகளம், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, இறகு பந்து உட்பட குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கு ஐந்து பயிற்சியாளர்களும், சில மாவட்டங்களில் ஏழு பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது இவர்களில் பலர் பதவி உயர்வு பெற்று சென்று விட்டனர். மாவட்டத்திற்கு ஒன்றிரண்டு பயிற்சியாளர்களாக உள்ளனர். ஒரு சில மாவட்டங்களில் பயிற்சியாளர்களே இல்லை. ஒப்பந்த அடிப்படையில், சிலரை நியமித்துள்ளனர்.200 பயிற்சியாளர்கள் வரை தேவை உள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால் குறிப்பிட்ட விளையாட்டுகளில், வீரர்களை உருவாக்க முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வாய்ப்பு இல்லாததால், ஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளுக்கு வீரர்களை உருவாக்க முடியாத நிலை உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us