Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ரூ.2கோடி நகை, பணம் மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் மீது கமிஷனரிடம் புகார்

ரூ.2கோடி நகை, பணம் மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் மீது கமிஷனரிடம் புகார்

ரூ.2கோடி நகை, பணம் மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் மீது கமிஷனரிடம் புகார்

ரூ.2கோடி நகை, பணம் மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் மீது கமிஷனரிடம் புகார்

ADDED : ஜூலை 26, 2011 01:34 AM


Google News

திருநெல்வேலி : நெல்லை அருகே 2கோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மோசடி செய்த பாளை., ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.இது குறித்து பாளை., வி.எம்.சத்திரம், ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த 25பேர் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூவிடம் மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;பாளை., பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர், ஆரோக்கிய நாதபுரத்தை சேர்ந்த 2பேருடன் சேர்ந்து நிலங்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். அப்போது எங்களுக்கு ரியல் எஸ்டேட் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டது.இந்நிலையில் ரியல்எஸ்டேட் அதிபர், ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த சிலரை தனித்தனியாக அணுகி மகளின் பூப்புனித நன்னீராட்டு விழாவிற்கு பணம் தேவைப்படுவதால் நகைகளை தருமாறு கூறினார்.



இதனை உண்மை என நம்பிய சிலர் நகையை கொடுத்தனர்.நகைகளை பெற்ற ரியல் எஸ்டேட் அதிபர், மீண்டும் நகையை திரும்பி வழங்கவில்லை. அதுபோல் மேலும் சிலரிடம் கடனாக பெற்ற பணத்தையும், நிலத்தை விற்ற பணத்தையும் வழங்காமல் காலதாமதம் செய்து வந்தார்.எங்கள் பகுதியில் மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் வரை அவர் மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் பணம் மற்றும் நகையை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் ரியல் எஸ்டேட் அதிபர் திடீரென தலைமறைவாகி விட்டார்.எனவே மாநகர போலீசார் மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us