/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/மான்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழாமான்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா
மான்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா
மான்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா
மான்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா
ADDED : ஜூலை 26, 2011 12:39 AM
அரியலூர்: அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியின் 17வது ஆண்டு விளையாட்டு விழா, பள்ளியின் முதல்வர் ஜூலியன் தலைமையில், பள்ளி வளாகத்தில் நடந்தது. துவக்கவிழாவில் பள்ளியின் மாணவ தலைவர் கிளமண்ட் ரோஜர் வரவேற்று பேசினார். பள்ளியின் துணை முதல்வர் அமல்ராஜ் முன்னிலை வகித்தார். விழா பிரமுகர் சந்திரன் தேசிய கொடியையும், அரியலூர் ரயில்வே மேலாளர் ரத்தினம் ஒலிம்பிக் கொடியையும் ஏற்றினர். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற அணிகள் சார்பில் அணித்தலைவர்கள் அவர் அவர் கொடிகளை ஏற்றினர். மாணவ, மாணவிகளின் அணிவகுப்புடன் தடகள விளையாட்டு போட்டிகள் துவங்கியது.விளையாட்டு போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று மான்ஃபோர்ட் அணியும், ஒழுக்கம் மற்றும் பண்பாட்டுக்கு கேபிரியல் அணியினர் அதிக புள்ளிகளையும் பெற்றனர். அணிவகுப்புக்கான சாம்பியன்ஷிப் கோப்பையை அந்தோணி அணியினரும் பெற்றனர். போட்டிகளின் நடுவர்களாக சுபா, செந்தில்ராணி, விஜயகுமார், ஹாக்கி பயிற்றுநர் சதீஷ், யோகா பயிற்றுநர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் பணியாற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து பள்ளி மாணவ துணை தலைவர் சிவசங்கரன் நன்றி கூறினார்.