/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இளம் எழுத்தாளர்கள் சந்திப்பு : புதுச்சேரி மகரந்தன் பங்கேற்புஇளம் எழுத்தாளர்கள் சந்திப்பு : புதுச்சேரி மகரந்தன் பங்கேற்பு
இளம் எழுத்தாளர்கள் சந்திப்பு : புதுச்சேரி மகரந்தன் பங்கேற்பு
இளம் எழுத்தாளர்கள் சந்திப்பு : புதுச்சேரி மகரந்தன் பங்கேற்பு
இளம் எழுத்தாளர்கள் சந்திப்பு : புதுச்சேரி மகரந்தன் பங்கேற்பு
ADDED : ஜூலை 25, 2011 12:12 AM
புதுச்சேரி : ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி இளம் எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
சாகித்ய அகாடமி சார்பில் கர்நாடகா மாநிலம் தர்வார் மாவட்டம் கன்னட குல புரோகித அலுரு வெங்கடராவ் பவன் தாருவாரில் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் 17 ம்தேதி துவங்கி 21ம் தேதி வரை நடந்தது. கடந்த 18ம்தேதி, இளம் எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி சாகித்ய அகாடமி பொதுக் குழு மற்றும் தமிழ் ஆலோ சனைக் குழு உறுப்பினர் மகரந்தன் தலைமை தாங்கினார். இதில் தமிழ் , கன்னடம் தெலுங்கு, மலை யாள எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்று விவாதித்தனர்.