/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொளார் நெல் கொள்முதல் நிலையத்தை மேலும் கால நீட்டிப்பு செய்ய வலியுறுத்தல்தொளார் நெல் கொள்முதல் நிலையத்தை மேலும் கால நீட்டிப்பு செய்ய வலியுறுத்தல்
தொளார் நெல் கொள்முதல் நிலையத்தை மேலும் கால நீட்டிப்பு செய்ய வலியுறுத்தல்
தொளார் நெல் கொள்முதல் நிலையத்தை மேலும் கால நீட்டிப்பு செய்ய வலியுறுத்தல்
தொளார் நெல் கொள்முதல் நிலையத்தை மேலும் கால நீட்டிப்பு செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூலை 25, 2011 10:54 PM
திட்டக்குடி : தொளார் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை மேலும் கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த இரண்டு மாதங்களாக திட்டக்குடி அடுத்த தொளாரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, தொளார், மேலூர், மருவத்தூர், கொத்தட்டை, இறையூர், செங்கமேடு, குடிகாடு, கொட்டாரம் உட்பட பல கிராம விவசாயிகள் தங்கள் நெல்லை விற்று பயனடைந்து வந்தனர்.
10 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் விவசாயிகளிடம் நெல் கையிருப்பு உள்ளநிலையில் வரும் 27ம் தேதியுடன் நெல் கொள்முதல் நிலையம் மூடப்படும் என தகவல் வெளியானது.நெல் கொள்முதல் நிலையத்தை கால நீட்டிப்பு செய்யக்கோரி விவசாயிகள் ஆர்.டி.ஓ.,வைச் சந்தித்து மனு கொடுத்தனர். இதனையடுத்து வரும் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.இந்நிலையில் விவசாயிகளிடம் அதிகளவில் நெல் கையிருப்பில் உள்ளதால் மேலும் இரண்டு வாரத்திற்கு நெல் கொள்முதல் நிலையத்தை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


