/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நடுவீரப்பட்டில் பயன்பாடின்றி பாழாகும் நீர் தேக்கத் தொட்டிநடுவீரப்பட்டில் பயன்பாடின்றி பாழாகும் நீர் தேக்கத் தொட்டி
நடுவீரப்பட்டில் பயன்பாடின்றி பாழாகும் நீர் தேக்கத் தொட்டி
நடுவீரப்பட்டில் பயன்பாடின்றி பாழாகும் நீர் தேக்கத் தொட்டி
நடுவீரப்பட்டில் பயன்பாடின்றி பாழாகும் நீர் தேக்கத் தொட்டி
ADDED : ஆக 22, 2011 10:13 PM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி பயன்படுத்தப்படாமல் பாழாகி வருகிறது.
பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சி தெற்கு தெருவிற்கு ஆழ்துளை குழாய் மூலம் நேரடி இணைப்பில் குடிநீர் நேரடியாக வழங்கினர். இதற்கான மோட்டார் மும்முனை மின்சாரம் இருந்தால்தான் இயக்க முடியும் என்பதால் கிராமங்களில் சிங்கிள் பேஸ் இணைப்பு அதிக நேரம் உள்ளதால் சீரான குடிநீர் கிடைக்காமல் பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் கடும் அவதியடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஒன்றிய பொது நிதி மூலம் புதிய போர் மற்றும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டினர். புதிய போர்வெல்லில் கலங்கலான எண்ணை பிசுபிசுப்புள்ள குடிநீர் வந்ததால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் பழைய போர் மூலம் குடிநீர் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. புதிய போரில் கம்ப்ரசர் சீரமைக்க வேண்டும். இல்லையெனில் பழைய போர் மூலம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றி சுத்தமான குடிநீர் வழங்கிட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


