/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புதொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஆக 03, 2011 01:50 AM
கடலூர் : அரசு தொழில் நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் கடலூர் மண்டல துணை
இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த ஆண்டு
நவம்பர் மாதம் நடக்க உள்ள அரசு தொழில்நுட்பத் தேர்வுகளான ஓவியம், தையல்,
இசை, நடனம், அச்சுக் கலை, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய
பாடங்களுக்கு வரும் 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு
பாடத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் அனுப்ப வேண்டும். மனுதாரர்கள்
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை, மனுவில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில்,
தேர்வுக்கு ஏழு நாட்கள் முன்பாக நேரில் பெறலாம். தேர்வு துவங்கும் தேதி
பின்னர் அறிவிக்கப்படும். நுழைவுச் சீட்டுகள் வீட்டுக்கு அனுப்பப்பட
மாட்டாது. குறைந்த பட்ச கல்வித் தகுதியாக கீழ்நிலையில் (லோயர்) 8ம் வகுப்பு
தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி அல்லது தனித்தேர்வர்களாக
8ம் வகுப்பில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேல்நிலையில்
(ஹயர்) இடைநிலைப் பள்ளி இறுதிச் சான்றிதழோ அல்லது அதற்கு சமமான சான்றிதழோ
பெற்றிருக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை கருவூலம் வாயிலாக மட்டுமே
செலுத்த வேண்டும். நடனப் பாடத்திற்கு தேர்வுக் கட்டணமாக கீழ் நிலையில் 57
ரூபாய், மேல்நிலையில் 62, இந்திய இசை கூடுதல் பாடத்திற்கு (செயல்முறை) கீழ்
நிலையில் 27, மேல்நிலையில் 37, மற்ற பாடங்களுக்கு கீழ் நிலையில் 37,
மேல்நிலையில் 47 ரூபாய் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை
கூடுதல் செயலர் (தொழில் நுட்பத் தேர்வு), அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
கல்லூரிச் சாலை, சென்னை - 6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம்
அனுப்பும் உறையின் மீது அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் 2011 என்று
குறிப்பிட்டு வரும் 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


