ADDED : அக் 04, 2011 01:52 AM
திருநெல்வேலி : நெல்லை அருகே ஆற்றுக்கு குளிக்க சென்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாயை சேர்ந்த பொன்இசக்கி மகன் இசக்கிமணி(17). இவர் சீவலப்பேரியில் மாமா தங்கப்பாண்டி வீட்டில் தங்கி அங்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம்வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை இசக்கிமணி தன் நண்பர்களுடன் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார். ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


