Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/போதையில் விழுந்தவர்களை அன்பால் மாற்ற முடியும்: எஸ்.பி.,

போதையில் விழுந்தவர்களை அன்பால் மாற்ற முடியும்: எஸ்.பி.,

போதையில் விழுந்தவர்களை அன்பால் மாற்ற முடியும்: எஸ்.பி.,

போதையில் விழுந்தவர்களை அன்பால் மாற்ற முடியும்: எஸ்.பி.,

ADDED : அக் 04, 2011 12:05 AM


Google News

கரூர்: 'குடிபோதையில் விழுந்தவர்களை அன்பால் பேசி அரவணைத்தால் மாற்ற முடியும்' என கரூர் மாவட்ட எஸ்.பி., நாகராஜன் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ கழகம் சார்பில் மது மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் கரூர் ஐ.எம்.ஐ., ஹாலில் நடந்தது. கூட்டத்தில் கரூர் மாவட்ட எஸ்.பி., நாகராஜன் பேசுகையில், ' போதை பழக்கம் குறித்த கட்டுரையை எழுதி 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவது பாராட்டத்தக்கது. மாணவர் பருவத்தில் குடிபோதை பழக்கம் குறித்த தலைப்பில் கட்டுரை போட்டி வைத்திருப்பது பொ ருத்தமானது. மாணவர் பருவத்தில்தான் மனம் தடுமாறும். போ ட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் நன்றாக தெரி ந்திருக்கும். அவர்கள் போதை பழக்கத்துக்கு செல்லமாட்டார்கள். மீளவே முடியாத பழக்கம் இல்லை போதை பழக்கம்.



குடி மற்றும் புகையிலை பழக்கத்தால் பலர் இளம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறப்பது வருத்தத்துகுரியது. நமக்குதான் குடிப்பழக்கம் மற்றும் புகை பழக்கம் இல்லை என சும்மா இருக்க கூடாது. உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாருக்காவது போதை பழக்கம் இருந்தால், அவர்ளை திருத்த முயற்சி செய்ய வேண்டும். எங்களுக்கு வரும் பெரும்பாலான புகார்கள் குடிபழக்கத்தால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்துதான் வருகிறது. அன்பு மற்றும் அரவணைப்பு இருந்தால் குடிபோதையில் விழுந்தவர்களை திருத்த முடியும். எங்கள் ஊரில் குடிபோதைக்கு அடிமையான தந்தையை, அவரது மகன் உண்ணாவிரதம் இருந்து திருத்தினார். உண்ணாவிரத போராட்டத்துக்கு உள்ள சக்தி வேறு எதற்கும் இல்லை' என்றார். கரூர் ஐ.எம்.ஐ., தலைவர் டாக்டர் சரவணன், செயலாளர் சீனிவாசன், பரணிபார்க் கல்வி நிறுவன முதன்மை முதல்வர் ராமசுப்ரமணியம், டாக்டர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us